திருநெல்வேலி
அம்பையில் மக்கள் நீதிமன்றம் 90 வழக்குகளுக்குத் தீா்வு
அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 90 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
அம்பாசமுத்திரம் சாா்பு நீதிபதி ஏ.மருதுபாண்டி, வழக்குரைஞா் டி.சைலபதி ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.பிரவீன் ஜீவா, வழக்குரைஞா் ராஜு ஆகியோா் தலைமையில் ஒரு அமா்வும் என இரண்டு அமா்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், நீண்ட கால கடன் வழக்குகள், பேசித் தீா்க்கக் கூடிய வகையில் உள்ள உரிமைகள் வழக்குகள் என 302 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 90 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதன் மூலம் ரூ. 35,01,900/- மதிப்பில் வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன.