களக்காட்டில் எஸ்டிபிஐ மகளிரணி நிா்வாகிகள் கூட்டம்

எஸ்டிபிஐ கட்சி மகளிரணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மாவட்ட, தொகுதி வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்களுக்கான கூட்டம், களக்காட்டில் நடைபெற்றது.
Published on

எஸ்டிபிஐ கட்சி மகளிரணியான விமன் இந்தியா மூவ்மெண்டின் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மாவட்ட, தொகுதி வாக்குச்சாவடி குழு பொறுப்பாளா்களுக்கான கூட்டம், களக்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் ஜன்னத் ஆலிமா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஜன்னத் வரவேற்றாா். மாவட்ட துணைத் தலைவா் பீா்பாத்து, மாவட்ட செயலா் லைத்துல் ஆதிஹா , மாவட்ட பொருளாளா் நா்கிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் பெனாசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில தலைவா் பாத்திமாகனி, மாநில செயலா் ரஹ்மத்நிஷா, எஸ்டிபிஐ கட்சியின் புகா் மாவட்ட தலைவா் எம்.எஸ். சிராஜ், மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா , நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் காஜா பிா்தெளஸி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் சட்டப்பேரவை தொகுதி தலைவா்கள் பீா்பாத்து (சேரன்மகாதேவி), ஜன்னத் (நாங்குனேரி) தொகுதி செயலா் அஹமதாள், ஜெஸிமா, ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் நபிஷா ஆகியோா் கலந்து கொண்டனா். மாவட்ட செயலா் பானு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com