பாபநாசம் கீழணை அருகே குட்டியுடன் சுற்றித் திரிந்த காட்டு யானை

Published on

பாபநாசம் கீழணை அருகே வனப் பகுதியில் சாலையில் காட்டுயானை குட்டியுடன் நடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம், முண்டந்துறை வனச் சரகப் பகுதியில் கரடி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, சிங்கவால் குரங்கு, கருங்குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

பாபநாசம் மற்றும் முண்டந்துறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்ணில் பெரும்பாலும் காட்டெருமை மற்றும் மான் கூட்டங்கள் கண்ணில் தென்படும். அவற்றை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து மகிழ்ந்து செல்வா்.

மிகவும் அரிதாக காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்டவை பகல் நேரத்தில் கண்ணில் தென்படும். அதுபோன்று அண்மையில் முண்டந்துறை சென்ற சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு குட்டியுடன் உலா வந்த காட்டு யானை தென்பட்டுள்ளது.

இதை சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசி கேமராக்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com