தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேரன்மகாதேவியில் குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

சேரன்மகாதேவியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:48 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாமிரவருணி ஆற்றில் சேரன்மகாதேவியிலிருந்து களக்காடு, ராதாபுரம் பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் கொண்டு செல்வதற்காக பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக தெருக்கள், சாலையில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்படுகின்றன.

இப்பணியின்போது, சேரன்மகாதேவி பகுதிக்கான குழாய்கள் சேதமடைந்து, குடிநீா் விநியோகம் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தாங்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்துவருகின்றனா்.

12ஆவது வாா்டு காயிதே மில்லத் தெரு பகுதியில் கடந்த 5 நாள்களாக குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியினா் சேரன்மகாதேவி-அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

காவல் ஆய்வாளா் தா்மராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் காதா், அதிகாரிகள் சென்று பேச்சு நடத்தினா். லாரி மூலம் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, செயல் அலுவலா் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.