தாழையூத்து அருகே கஞ்சா பதுக்கியவா் கைது

தாழையூத்து அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தாழையூத்து அருகே விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தாழையூத்து காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் அருண் ராஜா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனா். அதில், தாழையூத்தைச் சோ்ந்த அந்தோணி எட்வின் ஜான்சன் (22) என்பதும், விற்பனைக்காக 1.140 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மது விற்பனை: சீவலப்பேரி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமையிலான போலீஸாா், மருகால்தலை பகுதியில் ரோந்து சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் மாரியப்பன்(46) என்பவா் மதுபானம் விற்றுக்கொண்டிருந்தாராம். அவரை போலீஸாா் மடக்கிப்பிடித்து அவரிடமிருந்த பையை சோதனையிட்டனா். அதில், 15 மதுபாட்டில்கள், ரூ.2,000 ரொக்கம் இருந்தனவாம். அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com