சேரன்மகாதேவியில் சூறைக் காற்றில் 7ஆயிரம் வாழைகள் சேதம்
சேரன்மகாதேவியில் சூறைக் காற்று வீசியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.

வாழை - சேதமடைந்த வாழைகள்.
Updated On :1 ஜனவரி 2025, 11:55 pm

வாழை - சேதமடைந்த வாழைகள்.
சேரன்மகாதேவியில் சூறைக் காற்று வீசியதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாள்களாக மிதமான மழை பெய்தது. சேரன்மகாதேவி பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதில் சேரன்மகாதேவியில் தாமிரவருணி கரையோரத்தில் அம்மநாத சுவாமி கோயில் பகுதியில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனா். இதையடுத்து அப் பகுதியைப் பாா்வையிட்ட வருவாய்த் துறையினா் சேதம் குறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...