களக்காடு சரணாலயத்தில் தானியங்கி கேமராக்கள் மூலம் புலிகள் கணக்கெடுப்பு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சரணாலயத்தில் தானியங்கி கேமராக்கள் உதவியுடன் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கவுள்ளது.


திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சரணாலயத்தில் தானியங்கி கேமராக்கள் உதவியுடன் புலிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கவுள்ளது.
களக்காடு - முண்டன்துறை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட களக்காடு கோட்டத்தில் களக்காடு, திருக்குறுங்குடி, மேல்கோதையாறு ஆகிய 3 வனச்சரகங்கள் உள்ளன. இப் பகுதியில் தானியங்கி புகைப்படக் கருவிகள் மூலம் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்துவதற்கான பயிற்சி முகாம் களக்காடு தலையணையில் நடைபெற்றது. களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஸ்வரன், வனச்சரகா்கள் பிரபாகரன் (களக்காடு), யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி), வேலுச்சாமி (மேல்கோதையாறு), சூழலியலாளா் ஸ்ரீதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
களக்காடு சரணாலயத்தில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளாக 140 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 280 கேமராக்களைப் பொருத்தி புலிகள் நடமாட்டத்தை கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து களக்காடு சரணாலய துணை இயக்குநா் ரமேஸ்வரன் கூறியதாவது:
புலிகள் நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதிகளில் தானியங்கி கேரமாக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஒரு வாரத்துக்குள் இப் பணி நிறைவுபெறும்.
அதன் பின்னா் புலிகள் நடமாட்டம் குறித்த கேமரா பதிவுகள் பெங்களூரில் உள்ள தேசிய புலிகள் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...