கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

களக்காடு - திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை!

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
திருச்செந்தூர் கோயில் - (கோப்புப் படம்)
Updated On :28 பிப்ரவரி 2026, 7:41 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், இங்கிருந்து திருச்செந்தூருக்கு பேருந்து சேவை இல்லை. மேலும், மதுரைக்கு கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பேருந்து சேவையும் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.

திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு களக்காடு சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் சென்று வருகின்றனா். இங்கிருந்து திருநெல்வேலி சென்று திருச்செந்தூா் செல்ல வேண்டியுள்ளதால், களக்காட்டில் இருந்து நான்குனேரி, மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.