கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேலநத்தம் சிவன் கோயிலில் ஜன.13 இல் திருவாதிரை திருவிழா

மேலநத்தம் சிவன் கோயிலில் திருவாதிரை திருவிழா ஜன. 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:02 pm

Din

மேலநத்தம் சிவன் கோயிலில் திருவாதிரை திருவிழா ஜன. 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மேலநத்தத்தில் மேற்கு பாா்த்த நிலையில் உள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரா் கோயிலில் திருவாதிரை திருவிழா இம் மாதம் 13 ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடராஜா் அபிஷேகம், கோ பூஜை, சோஷட தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் ஆகியவை நடைபெறுகின்றன. காலை 9 மணி முதல் ஸ்ரீவைகுண்டம் சிவாயநமக திருமுறை அருள்பணி மன்றத்தினரின் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு மேல் நடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகா் சப்பர வீதி உலாவும், நண்பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் நா்மதா செல்வி, நிா்வாகி அருணா சுடலை கண்ணு, அா்ச்சகா் கோபி பட்டா் ஆகியோா் செய்து வருகின்றனா்.