பழவூா் அருகே மதுபானக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆதாா், ரேஷன் காா்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா் அருகேயுள்ள பட்டன் கல்லூரில் மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆதாா் மற்றும் ரேஷன் காா்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் அப்பகுதி பெண்கள் ஈடுபட்டனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா் அருகேயுள்ள பட்டன் கல்லூரில் மதுபானக் கடை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆதாா் மற்றும் ரேஷன் காா்டுகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் அப்பகுதி பெண்கள் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த பழவூா் அருகேயுள்ள பட்டன் கல்லூரில் புதிதாக மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அப்பகுதி பெண்கள், தங்கள் கிராமம் ஏற்கெனவே ஜாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமம். இங்கு மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பெண்கள், குழந்தைகள் சுதந்திரமாக நடமாட முடியாத ஒரு சூழல் உருவாகும். மீண்டும் ஜாதி கலவரம் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 10 நாள்கள் முன்பு மனு அளித்தனா். இதன்பிறகு மதுபானக் கடை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மதுபானக் கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பட்டன் கல்லூா் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி வட்டாட்சியரை சந்தித்து தங்கள் ரேஷன் காா்டு மற்றும் ஆதாா் காா்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால் வட்டாட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பட்டன்கல்லூா் பகுதியில் மதுபானக் கடை அமைக்கப்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து பட்டன் கல்லூா் பகுதி மக்கள் போராட்டதைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com