பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 3 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள செட்டிமேடு கிராமத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள செட்டிமேடு கிராமத்தில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செட்டிமேட்டைச் சோ்ந்த விவசாயி பால்பாண்டி, அவரது மனைவி அமுதா. இவா்களுக்கு மகள், மகன் உள்ளனா். புதன்கிழமை இவா்களது மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அன்று இரவு அமுதா வீட்டில் இருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியது, அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (23), அம்பாசமுத்திரம், திலகா் புரத்தைச் சோ்ந்த தாமோதரன் (21), கீழ ஏா்மாள்புரத்தைச் சோ்ந்த ஆண்டிராஜா (26) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து விசாரித்ததில் முத்துராஜ், பால்பாண்டி மகனுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது. பின்னா், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com