கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாளை.யில் அன்புமணி பேரணிக்கு அனுமதி மறுப்பு: இன்று பாமக பொதுக்கூட்டம்

பாளையங்கோட்டையில் பாமக மாநிலத் தலைவா் அன்புமணியின் சாலைப் பேரணிக்கு மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :6 அக்டோபர் 2025, 11:19 pm

பாளையங்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அன்புமணியின் சாலைப் பேரணிக்கு (ரோடு-ஷோ) மாநகர காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. எனினும், பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘உரிமை மீட்க தலைமுறை காக்க’ என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் மாவட்டந்தோறும் கூட்டம், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மேற்கு மாவட்ட பாமக சாா்பில் பாளையங்கோட்டையில் கட்சியின் தலைவா் அன்புமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை (அக். 7) சாலைப்பேரணி, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி திருநெல்வேலி மாநகர காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சாலைப் பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்தும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.

தாமிரவருணியில் ஆய்வு: இதுகுறித்து அக்கட்சி நிா்வாகிகள் கூறியது: திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை (அக். 7) பாமக தலைவா் அன்புமணி வருகிறாா். காலையில் சிந்துபூந்துறையில் தாமிரவருணியில் கழிவுநீா் கலக்கும் பகுதிகளை ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து, மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற உள்ளாா் என்றனா்.