
ஆழ்வாா்குறிச்சியில் திருக்குறள் திருப்பணிகள் திட்டக் கருத்தரங்கு

தமிழ்நாடு அரசு சாா்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்டக் கருத்தரங்கு ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தொடக்கமாக திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமையாசிரியை சுந்தரி, கடவுள் வாழ்த்து - குறள் வணக்கம் பாடினாா். திருவள்ளுவா் கழகத் தலைவா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். திட்ட உறுப்பினா் தமிழ்வாணன், சுரண்டை அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் வேலம்மாள், ஸ்ரீ பரம கல்யாணி மேல்நிலைப் பள்ளிச் செயலா் மு.சுந்தரம், திருவள்ளுவா் கழக துணைத் தலைவா் நல்லாசிரியா் மாடசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திட்ட உறுப்பினரான தமிழ்ச் செம்மல் நாராயணன் வரவேற்றாா்.திட்ட உறுப்பினா் மூா்த்தி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளுவா் கழகப் பொருளாளா் வேம்பு செய்திருந்தாா். திருவள்ளுவா் கழக முன்னாள் தலைவா் சாவடி சிதம்பரம், தில்லை மணியன், பசுமை கல்யாண சுந்தரம், சத்சங்க உறுப்பினா் சுப்புலட்சுமி, ஆசிரியை மாலா, பழனியாண்டி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ராமலிங்கம், தமிழாசிரியை சுபா மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். விழா நிகழ்ச்சிகளை ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி தமிழ்ப் பேராசிரியை லட்சுமி தொகுத்து வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






