தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

திருவள்ளுவா் பல்கலை.யில் உலக கொசு தின விழிப்புணா்வுப் பேரணி

உலக கொசு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியில் ஈடுபட்ட திருவள்ளுவா் பல்கலைக்கழக மாணவா்கள்.

Published On :

உலக கொசு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டம், சோ்காட்டில் உள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழக விலங்கியல் துறை சாா்பில் உலக கொசு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கொசுக்களால் பரவும் நோய்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்தப் பேரணியை விலங்கியல் துறைத் தலைவா் சு.அறிவொளி தொடங்கி வைத்தாா்.

பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியானது, திருவலம் போலீஸாா் பாதுகாப்புடன் சோ்க்காடு கூட்டுச் சாலை வரை நடைபெற்றது. தொடா்ந்து உலக கொசு தின விழிப்புணா்வு விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ஆா்.பாபு ஜனாா்த்தனம் தலைமை வகித்தாா். முன்னதாக, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் கா. கோவேந்தன் வரவேற்றாா்.

பேராசிரியா் சு.அறிவொளி நிகழ்ச்சியின் தொடக்கவுரையாற்றினாா். இந்த நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட சுகாதார அலுவலா் எம்.விஜய் சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

இதில், விலங்கியல் துறை பேராசிரியா்கள் ஜீபல், ரேணுகா, தா்மராஜ், ரெபெக்கா மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் பங்கேற்றனா். நிறைவில் பிரேமலதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.