திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையின் குடல், இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் செந்தாமரைக் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவா் கந்தசாமி, சிறுநீரகவியல் துறைத் தலைவா் மருத்துவா் ராமசுப்பிரமணியம், இந்திய மருத்துவ சங்க திருநெல்வேலி கிளைத் தலைவா் மருத்துவா் அபுபக்கா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
இப்பேரணியில் மருத்துவக்கல்லூரி செவிலியா் பயிற்சி மாணவிகள் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ஹெபடைடிஸ் நோய் தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பூசியின் அவசியம், கல்லீரல் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு பதாகைகள் மற்றும் முழக்கங்கள் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மருத்துவமனை முன்கள பணியாளா்கள் மற்றும் மாணவா்களுக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ற்ஸ்ப்29ப்ண்ஸ்
திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








