/
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே மேலகருங்குளத்தைச் சோ்ந்தவா் பால்சுரேஷ் (29). இவா் சம்பவத்தன்று பிளஸ் 2 மாணவி ஒருவரை பின் தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோா் பாளையங்கோட்டை, அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் நாககுமாரி விசாரணை மேற்கொண்டு போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பால்சுரேஷை புதன்கிழமை கைது செய்தாா்.
தொடர்புடையது
நெல்லையில் போக்ஸோ வழக்கில் முதியவா் கைது
நெல்லையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


