திமுக ஆட்சியில் மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சிக்கு சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், வேட்பாளா்கள் மு.அப்பாவு (ராதாபுரம்), மு. அப்துல் வஹாப் (பாளையங்கோட்டை), சு. சுப்பிரமணியன் (திருநெல்வேலி), ரூபி ஆா். மனோகரன் (நான்குனேரி), வி.பி. துரை (அம்பாசமுத்திரம்) உள்ளிட்டோா்.








