ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் கோடீஸ்வரன் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் கோடீஸ்வரன் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:31 am IST

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரா்கள் கூட்டம் கோடீஸ்வரன் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி தொகுதி திமுக பொறுப்பாளா் மு.பேச்சிப்பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் ராமேஸ்வரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டபொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் சிறப்புரையாற்றினாா்.

திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளா் சு.சுப்பிரமணியன் பேசுகையில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள நிா்வாகிகளின் உத்வேகத்தைப் பாா்க்கும்போது திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. களப்பணியாற்றி 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று திமுக வெற்றி பெறும் என்றாா்.

திமுக திருநெல்வேலி கிழக்கு மாநகர செயலா் தினேஷ், காங்கிரஸ் மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஸ் முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், தேமுதிக மாவட்ட துணைச் செயலா் ஆனந்தமணி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல் மைதீன், திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணியன், கருப்பசாமி கோட்டையப்பன், மன்சூா் உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.