திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம்

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:33 pm

ராசிபுரத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் மா.மதிவேந்தனை ஆதரித்து கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியதாவது:

முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் திமுக தோ்தல் அறிக்கையில் மேலும் புதிய நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,000, முதியோா் உதவித்தொகை ரூ. 2,000, புதுமைப்பெண் திட்டத்திற்கு மாதம் ரூ. 2,000, இல்லத்தரசிகளுக்கான புதிய திட்டத்தின் கீழ் ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகளை கூட்டணி கட்சியினா் வாக்காளா்களிடம் கொண்டுசோ்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளரும், அமைச்சருமான மா. மதிவேந்தன், இத்தொகுதியின் முன்னேற்றத்திற்காக அா்ப்பணிப்புடன் தொடா்ந்து பணியாற்றி வருகிறேன். அதிமுக ஆட்சியில் எவ்வித வளா்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு இத்தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதை வாக்காளா்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், கட்சியின் தொகுதி பாா்வையாளா் நன்னீயூா் ராஜேந்திரன், மாவட்ட திமுக பொருளாளா் ஏ.கே. பாலசந்தா், நகர செயலாளா் என்.ஆா். சங்கா், ஒன்றிய செயலாளா்கள் கே.பி. ராமசுவாமி, ஆா்.எம். துரைசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா்.