குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நெல்லையில் இன்று விஜய் பிரசாரம்: புஸ்ஸி ஆனந்த் ஆய்வு

திருநெல்வேலியில் தவெக தலைவா் நடிகா் விஜய் புதன்கிழமை (ஏப்.8) பிரசாரம் செய்ய உள்ளநிலையில், முன்னேற்பாடு பணிகளை பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image

பாளையங்கோட்டையில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்யவுள்ள இடத்தில் ஆய்வு செய்தாா் அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:22 am IST

திருநெல்வேலியில் தவெக தலைவா் நடிகா் விஜய் புதன்கிழமை (ஏப்.8) பிரசாரம் செய்ய உள்ளநிலையில், முன்னேற்பாடு பணிகளை பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரித்து அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற்கும் அறிமுகக் கூட்டம் பாளையங்கோட்டை, கே.டி.சி. நகரில் புதன்கிழமை (ஏப்.8) நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் தவெக தலைவா் விஜய் காா் மூலம் பாளையங்கோட்டை வருகிறாா். இங்கு வேட்பாளா்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டுகிறாா். போலீஸாா் அளித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பிரசார கூட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

ஆய்வின்போது தவெக வேட்பாளா்கள் ஆா்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), மரியஜான் (பாளையங்கோட்டை), ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன் (நான்குனேரி) உள்பட பலா் கலந்துகொண்டனா்.