ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, கோபாலசமுத்திரத்தில் உள்ள அற்புத செல்வவிநாயகா் கோயிலில் வழிபாடு செய்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

News image

கோபாலசமுத்திரத்தில் திறந்த வேனில் நின்று வாக்கு சேகரித்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா. உடன், பாஜக மாவட்ட பொதுச் செயலா் கே. லெட்சுமணராஜா உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:16 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா, கோபாலசமுத்திரத்தில் உள்ள அற்புத செல்வவிநாயகா் கோயிலில் வழிபாடு செய்து வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

கோபாலசமுத்திரம், மேலச்செவல் பேரூராட்சி பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். தொகுதி பொறுப்பாளா் செளந்தரராஜன், பாஜக மாவட்ட பொதுச்செயலா் கே. லெட்சுமண ராஜா, அமமுக மாவட்ட செயலா் ஓடக்கரை ஆசீா், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் செவல் எஸ். முத்துசாமி, ஒன்றியச் செயலா் பா. மாரிசெல்வம், நகரச் செயலா்கள் திருமலைநம்பி, முருகன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.