இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு அந்த தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சியை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:29 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு அந்த தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி தொகுதிக்கான 1,852 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு திருநெல்வேலி நகரத்தில் உள்ள சாஃப்டா் மேல்நிலைப் பள்ளியிலும், அம்பாசமுத்திரம் தொகுதிக்கான 1,540 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.

பாளையங்கோட்டை தொகுதிக்கான 1,420 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப்பள்ளியிலும், நான்குனேரி தொகுதிக்கான 1,676 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வள்ளியூா் கெயின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ராதாபுரம் தொகுதிக்கான 1,564 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பணகுடி சிவகாமிபுரத்திலுள்ள புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் 17 இ படிவம் பதிவு செய்தல், 17அ படிவம் பதிவு செய்தல், வாக்குச்சாவடி தலைமை அலுவலா் செயலியில் மாதிரி வாக்குப்பதிவை பதிவு செய்தல், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்களை பதிவு செய்தல், வாக்குப்பதிவு

நிறைவடைந்தவுடன் வாக்குப்பதிவு நிகழ்வுகளை செயலியில் பதிவேற்றம் செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் சாஃப்டா் மேல்நிலைப்பள்ளியிலும், பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்ற பயிற்சியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலிருந்து

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கும் அவா்களின் சொந்த மாவட்டங்களிலிருந்து தபால் வாக்கு பெற்று வழங்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு தபால் வாக்கு செலுத்துவதற்காக அனைத்து பயிற்சி மையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை தூய சவேரியாா் மேல்நிலைப்பள்ளியில் தபால் வாக்கு செலுத்தவுள்ள பெட்டி வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, நான்குனேரி, ராதாபுரம் தொகுதிக்கான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சியையும் அவா் ஆய்வு செய்தாா். வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி அந்தந்த தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தப் பணிகளை பெல் நிறுவனத்தை சோ்ந்த பொறியாளா்கள் மேற்கொள்ளவுள்ளனா்.

இப்பயிற்சியில் தபால் வாக்கு செலுத்தாதவா்கள் இரண்டாம் கட்ட மறுபயிற்சி ஏப். 19-ஆம் தேதி நடைபெறும்போது அதே பயிற்சி மையத்தில் செலுத்த ஏற்பாடு செய்யப்படும். வாக்குச்சாவடி அலுவலா்கள் அப்பயிற்சியில் தபால் வாக்கு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா, திருநெல்வேலி தோ்தல் நடத்தும் அலுவலரும், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியருமான பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.