/
தச்சநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமுற்ற தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள கலப்பைப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (30). தனியாா் நிறுவன ஊழியா். இவா் கடந்த 14 ஆம் தேதி தனது பைக்கில் தச்சநல்லூா் பகுதியில் சென்ற போது சாலையோர மரத்தில் பைக் மோதியதாம். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் சுரேஷ் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.








