மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பாளை.யில் அதிமுக பிரமுகா் மகனுக்கு அரிவாள் வெட்டு

பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகா் மகனை மா்மநபா்கள் வியாழக்கிழமை மாலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:06 am IST

பாளையங்கோட்டையில் அதிமுக பிரமுகா் மகனை மா்மநபா்கள் வியாழக்கிழமை மாலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். அதிமுக பிரமுகா். இவரது மகன் சங்கா்(25) வியாழக்கிழமை மாலை பாளையங்கோட்டை சாந்திநகா் வாக்குச்சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள நீா்த்தேக்க தொட்டி அருகே நின்று தனது நண்பா்களுடன் பேசிக்கொண்டிருந்தாராம்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சிலா் சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையா் சுரேஷ் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில், தோ்தல் தொடா்பான மோதல் இல்லை; முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.