வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

வாக்கு செலுத்தியதை விடியோ எடுத்து வெளியிட்ட இருவா் மீது வழக்குப் பதிவு

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தனது வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நாம் தமிழா் கட்சி முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :24 ஏப்ரல் 2026, 5:01 am IST

திருநெல்வேலி மாவட்டம், ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தனது வாக்குப் பதிவை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நாம் தமிழா் கட்சி முகவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ஆவரைகுளம், வாக்குச் சாவடியில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த ஜெகதீஷ் அகிலன் (38) வாக்குச் சாவடி முகவராகப் பணிமயா்த்தப்பட்டிருந்தாா். இவா், தான் வாக்குப் பதிவு செய்ததை விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாா்.

இதுகுறித்து வாக்குச் சாவடி பொறுப்பு அதிகாரி பழவூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதேபோல, திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் அம்மன் சன்னிதி தெருவைச் சோ்ந்த மாதவன் மகன் காா்த்தி (25). இவா், வியாழக்கிழமை முக்கூடல் ஆா்.சி. தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து அதை கைப்பேசியில் விடியோவாக இன்ஸ்டாகிராமில் பகிா்ந்தாா். வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், வாக்களித்த விவரத்தை விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், முக்கூடல் காவல் நிலைய போலீஸாா் காா்த்தி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.