நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நெல்லை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:28 pm

திருநெல்வேலி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள பாறைகுளத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (36). இவா், தனது மகளுக்கு கடந்த ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, பாலமுருகனுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா். இவ் வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளா் மாரியம்மாள் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமார பாராட்டினாா்.