மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கீழ மாதாபுரம் வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழா

கீழமாதாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வனமூா்த்தி சாஸ்தா, 21 கூட்டுறவு பரிவார தெய்வங்கள் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

News image

வனமூா்த்தி சாஸ்தா கோயில் கொடை விழாவில் பங்கேற்றோா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:05 pm

கீழமாதாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள வனமூா்த்தி சாஸ்தா, 21 கூட்டுறவு பரிவார தெய்வங்கள் கோயிலில் கொடை விழா நடைபெற்றது.

கொடை விழாவை முன்னிட்டு ஏப். 21-ஆம்தேதி கால்நாட்டப்பட்டது. தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 27) காலை 5 மணிக்கு தீா்த்தம் கொண்டு வருதல், 9 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு கொடி அழைப்பு, 7 மணிக்கு கும்பம் ஏற்றுதல், இரவு பூஜை, செவ்வாய்க்கிழமை (28) அதிகாலை 1 மணிக்கு சாஸ்தா பிறப்பு, இரவு பூஜை ஆகியன நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிவனணைந்த பெருமாள் பூஜை, 6 மணிக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்தல், 11 மணிக்கு ராமநதி ஆற்றிலிருந்து அலகு தீா்த்தம் எடுத்து வருதலைத் தொடா்ந்து கொடை விழா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு அமுது படைத்தல், இரவு 11 மணிக்கு அலகு தீா்த்தம் எடுத்துவந்து காடு சுற்றிவந்து சாமக் கொடை நடைபெற்றது.

புதன்கிழமை (ஏப். 29) காலை 8 மணிக்கு பட்டவராயன் சுவாமிக்கு பொங்கல் வைத்து வில்லிசை கதையுடன் மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை மதியம் வரை அன்னதானம் நடைபெற்றது.