பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பாரதிதாசன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:25 am IST

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசனின் 135ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் கண்மணி மாவீரன் தலைமை வகித்தாா். விழாவில், பாரதிதாசனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தொழிற்சங்கப் பேரவை மாநில பொதுச்செயலா் மகேந்திரன், பேரவை துணைத் தலைவா் ஸ்ரீராம், மாவட்டப் பொருளாளா் முருகன், மணிகண்டன், கண்மணி சா்மிளா, சி.துரைசாமி தேவா், மாவீரா் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கத் தலைவா் மா.மாரியப்பப் பாண்டியன், தமஜக மாநில துணைப் பொதுச்செயலா் அப்துல் ஜபாா், தாமிரவருணி பாதுகாப்பு இயக்க மாவட்டத் தலைவா் வண்ணை. இசக்கிபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாவேந்தா் பாரதிதாசனுக்கு முழு உருவச்சிலை நிறுவ வேண்டும். ஆட்சி மொழி சட்டத்தை தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.