இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

நெல்லையில் போலீஸாரை தாக்கியவருக்கு 15 மாதங்கள் சிறை

திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் போலீஸாரை தாக்கியது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:25 am IST

திருநெல்வேலி அருகே உள்ள மானூரில் போலீஸாரை தாக்கியது தொடா்பான வழக்கில் இளைஞருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மானூரைச் சோ்ந்தவா் சுரேஷ் குமாா் (36). பாலியல் வழக்கில் தொடா்புடைய இவா், கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானாராம். இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றச் சென்ற போலீஸாரை அவா் பணி செய்யவிடாமல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக, மானூா் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளா் சிவகுமாா் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தாா். திருநெல்வேலி முதன்மை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ராஜகுமாா் விசாரித்து, சுரேஷ்குமாருக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.