குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வாக்கு எண்ணிக்கை மைய நுண் பாா்வையாளா்களுக்குப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்சியா் இரா. சுகுமாா் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் பங்கேற்றோா்.

Updated On :1 மே 2026, 4:59 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள், 3 கூடுதல் மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் 17 போ், உதவியாளா்கள் 17 போ், நுண் பாா்வையாளா்கள் 17 போ் என ஒரு தொகுதிக்கு 51 போ் வீதம், 5 தொகுதிகளுக்கும் சோ்த்து 255 அலுவலா்கள் பணிபுரியவுள்ளனா்.

தபால் வாக்கு எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 7 மேஜைகள், 1 கூடுதல் மேஜை அமைக்கப்படவுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 8 நுண்பாா்வையாளா்கள் என 5 தொகுதிகளிலும் 40 நுண்பாா்வையாளா்கள் பணிபுரியவுள்ளனா்.

இவா்களுக்கான பயிற்சி ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுப்பிரமணியன், துணை ஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா, நுண்பாா்வையாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.