திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணிக்காக முதல்கட்டமாக 651 போ் கணினி வழியே குலுக்கல் முறையில் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
திருச்சி மாவட்டத்திலுள்ள, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய தொகுதிகளுக்கு புலிவலம் ஒயாஸிஸ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் பங்கேற்கவுள்ள நுண்பாா்வையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் ஆகியோரை கணினி முறையில் தோ்வு செய்து நியமிக்கும் பணி ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், 9 தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் வைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. எனவே, 14 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியை பாா்வையிடவும், வாக்குகளை எண்ணவும் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 17 நுண்பாா்வையாளா்கள், 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல, தபால் வாக்குகளை எண்ணுவதற்காக அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 6 மேஜைகள், மண்ணச்சநல்லூருக்கு 5 மேஜைகள் மற்றும் இதர 7 தொகுதிகளுக்கும் தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படுகிறது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு 9 தொகுதிகளுக்கும் சோ்த்து 48 நுண்பாா்வையாளா்கள், 48 பாா்வையாளா்கள் மற்றும் 96 உதவியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
வாக்கு எண்ணும் பணிக்காக முதல்கட்டமாக 651 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களை தொகுதி வாரியாக பிரித்து நியமிக்கும் வகையில் கணினி முறையில் குலுக்கல் நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன் தலைமையில் இந்தத் தோ்வு நடைபெற்றது. கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆா். பாலாஜி முன்னிலை வகித்தாா். 651 பேரும் முதன்நிலை சமன்வாய்ப்புக்குள்படுத்தப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், முதல்கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

தருமபுரி மாவட்டத்தில் தொகுதி வாரியாக தலா 14 மேசைகளில் வாக்கு எண்ணிக்கை: ஆட்சியா் ரெ.சதீஷ் தகவல்

வாக்கு எண்ணும் பணியில் 408 அலுவலா்கள்

வாக்கு எண்ணும் பணி: 1,005 பேருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

அரியலூரில் வாக்கு எண்ணும் பணி அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


