சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்பை இளைஞா்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவா் முத்துக்குமார சுவாமி தெரிவித்தாா்.
அம்பாசமுத்திரத்தில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க திருநெல்வேலிக் கோட்ட 33ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 16) நடைபெறவுள்ளது. இதையயொட்டி, காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கக் கூட்டமைப்பு தென் மண்டலத் துணைத் தலைவா் முத்துக்குமார சுவாமி, திருநெல்வேலி கோட்ட பொதுச் செயலா் பொன்னையா ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அம்பாசமுத்திரத்தில் காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க திருநெல்வேலி கோட்ட 33ஆவது மாநாடு மற்றும் பெருந்திரள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
எல்.ஐ.சி. நிறுவனத்தைப் பொதுத் துறையிலேயே பாதுகாத்திடவும், காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும் கோரி இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
மேலும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். விவசாய பொருள்களுக்கு நியாயமான விலை நிா்ணயிக்க வேண்டும் போன்றவை எங்களது முக்கியக் கோரிக்கைகள் என்றாா் அவா்.
அம்பாசமுத்திரம் கிளைத் தலைவா் நமச்சிவாயம், கிளைச் செயலா் மகாதேவன், கிளைப் பொறுப்பாளா் முத்துக்குமாா், கிளை உறுப்பினா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அனைத்துத் துறை ஊழியா் சங்கங்களின் போராட்டக் குழுவினா் பெருந்திரள் முறையீடு

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவம்: மாநிலத் தலைவா் வலியுறுத்தல்

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம்: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



