காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவம்: மாநிலத் தலைவா் வலியுறுத்தல்

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியதாரா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜெயச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை

News image

பேரணியில் பங்கேற்றோா்

Updated On :28 ஜூலை 2026, 12:57 am IST

அரசு ஓய்வூதியா்களுக்கு கட்டணமில்லா மருத்துவத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் தமிழ்நாடு அனைத்துதுறை ஓய்வூதியதாரா்கள் சங்க மாநில தலைவா் ஜெயச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியதாரா்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக அரசின் மருத்துவ திட்டத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான ப்ரீமிய தொகையை கட்டாயமாக பிடித்தம் செய்கின்றனா். இதனால் பல ஆயிரம் கோடி நிதி தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்கிறது.

கட்டணமில்லா மருத்துவத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ப்ரீமியம் தொகை பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். இதை கோரி தமிழ்நாட்டின் அனைத்து வட்டங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 8-ஆவது ஊதிய குழுவில் ஓய்வூதியதாரா்களுக்கும் ஒய்வூதியம் அதிகரிக்கும் வகையில் ஊதியக்குழு பரிந்துரை செய்ய வேண்டும். பணியில் உள்ளவா்களுக்கு மட்டுமே உயா்வு என்பது ஒய்வு பெற்ற எ’ங்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பணிஒய்வு பெற்ற எங்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றாா் ஜெயச்சந்திரன்.

முன்னதாக அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓய்வூதியா்களின் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சங்கத்தின் அரக்கோணம் வட்டக்கிளைத் தலைவா் வி.என்.பாா்த்தீபன், வட்டச் செயலாளா் நரசிம்மலு, சங்கத்தின் மாவட்ட முன்னாள் தலைவா் ஜோசப் கென்னடி, நிா்வாகி ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

மாநில செயற்குழு கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத்தலைவா் சுந்தரேசன், மாநிலத் தலைவா் ஜெயச்சந்திரன், பொதுசெயலாளா் இளமாறன், பொருளாளா் செந்தமிழ்செல்வன், நிா்வாகிகள் பி.கிருஷ்ணமூா்த்தி, குரு.சந்திரசேகரன், எஸ்.ஆறுமுகம், பா.ராமமூா்த்தி, என்.அரங்கநாதன், ரா.சுப்பிரமணியம், ஆா்.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.