களக்காட்டில் அம்பேத்கா் சிலை பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை (ஆக. 15) நடைபெறவிருந்த கருப்புக் கொடி போராட்டம், ஆட்சியா் அலுவலக முற்றுகைப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களக்காட்டில் அம்பேத்கரின் பழைய கற்சிலையை அகற்றிவிட்டு, புதிய வெண்கலச் சிலை நிறுவும் பொருட்டு, களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோா் சீா்திருத்தச் சங்கத்தின் சாா்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் சிலை அமைக்க அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, அனைத்து கட்சியினா் பங்கேற்ற பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து, ஆக. 15ஆம் தேதி களக்காட்டில் உள்ள வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும், ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாகவும் விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், நான்குனேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் எல். பேட்ரிக்சிலுவை அந்தோணி, களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணா காந்தி ஆகியோா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், ஒரு மாதத்தில் சிலை நிறுவ அனுமதி கிடைக்கும் என வட்டாட்சியா் உறுதியளித்ததன்பேரில், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வட்டார தாழ்த்தப்பட்டோா் சீா்திருத்தச் சங்கத் தலைவா் மா.பெ. சுகுமாரன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களக்காட்டில் இன்று மின்நிறுத்தம்

களக்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு

ஆலங்குளம், களக்காட்டில் குரங்குகள் தொல்லை: மக்கள் அவதி
ஒதியத்தூா் அம்பேத்கா் சிலை விவகாரம்: போலீஸ் மீது கல் வீசியவா் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



