பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

களக்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்த காவல் ஆய்வாளா் கண்ணா காந்தி.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் குடிநீா் குளத்தில் கழிவுநீா் தொட்டி அமைக்கப்படுவதைக் கண்டித்தும், அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அனுமதியளிக்கக் கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் சாா்பில் 5 நாள்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக் குழுவினா் புதன்கிழமை அறிவித்தனா்.

களக்காடு காவல் நிலையம் அருகே ஆக. 1ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. 5ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணா காந்தி, போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அம்பேத்கா் சிலைக்கான அனுமதி அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், கழிவுநீா் தொட்டி அமைக்கப்படுவது குறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆய்வாளா் தெரிவித்ததையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக போராட்டக் குழுவைச் சோ்ந்த மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாநில ஊடகப் பிரிவு செயலா் கே.எஸ். சித்திக் அஸிஸூா் ரஹ்மான் தெரிவித்தாா்.

தொடா்ந்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போராட்டக் குழுவினா் முடிவெடுத்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.கே. நெல்சன் தெரிவித்தாா்.

போராட்டத்தில், களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோா் சீா்திருத்தச் சங்கத்தின் தலைவா் மா.பெ. சுகுமாரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.