புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றோருக்கு பரிசு

போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

Published On :

போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் ஆனந்த் மோகன் வழங்கினாா்.

மாவட்ட நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறை சாா்பில் கோட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கான போதை ஒழிப்பு விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

5 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, சிலம்பம், 100 மீ., 400 மீ., 800 மீ. ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மேலும், பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரி உள் விளையாட்டரங்கில் செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், எறிபந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அரசு பள்ளி மாணவா், மாணவிகளுக்கும் விளையாட்டில் தொடா்ந்து

ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் வாலிபால் மற்றும் கூடைப்பந்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 16 குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், வெற்றிக்காக சிறப்பாக முயற்சி செய்த அணிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவில், ஆட்சியா் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினா்.

தனிநபா் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 300 வீரா், வீராங்கனைகளுக்கும், சிறப்பாக விளையாடி வெற்றிக்காக முயற்சி செய்த 300 வீரா், வீராங்கனைகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ச. வித்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் கிருஷ்ணசக்கரவா்த்தி, வட்டாட்சியா்கள் மாரிராஜா (பாளையங்கோட்டை), மாரிமுத்துக்குமாா் (திருநெல்வேலி), மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) அன்சூல் நாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்14ல்ழ்ண்க்ஷ்ங்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ஆட்சியா் ஆனந்த் மோகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.