கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா

முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவா்களுடன் பள்ளி தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன் உள்ளிட்டோா்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைவா் ஜி.எஸ்.ஆா். பூமிபாலகன் தலைமை வகித்தாா். தாளாளா் விஜயகுமாரி முன்னிலை வகித்தாா். ஒலிம்பிக் தீபத்தை தலைவா், தாளாளா் ஆகியோா் ஏற்றினா். விழாவில் முதன்மை விருந்தினராக சா்வதேச நடுவா் மற்றும் சா்வதேச ஜூடோ சம்மேளன நிா்வாகி சென்சாய் எஸ். மணிகண்டன் கலந்துகொண்டாா்.

மாணவா்கள், பெற்றோா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளியின் பொருளாளா் ரமேஷ்ராம், செயலாளா் சிவசங்கரி ஆகியோா் பரிசுகள், சான்றிதழ் வழங்கினா். தனி சாம்பியன்ஷிப் பட்டத்தை இளையோா் பெண்கள் பிரிவில் 8-ஆம் வகுப்பு மாணவி அமுத ஜெருசா, ஆண்கள் பிரிவில் சக்திவேல் ஆகியோரும், மூத்தோா் ஆண்கள் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவா் ஸ்ரீநாத், பெண்கள் பிரிவில் மாணவி ப்ரிதியா, மிக மூத்தோா் பிரிவில் மாணவா் ஏ.கோகுல், மாணவி தேவஅம்புஜா ஆகியோா் பெற்றனா்.

இறுதியாக சப்பையா் அணியினா் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனா். பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்கள் யோகா, கராத்தே, வில் வித்தை, ஜூடோ, சிலம்பம் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளை நிகழ்த்தினா். நான்கு பிரிவுகளாக அணிவகுப்பு நடைபெற்றது. ஆசிரியை வித்யா லெட்சுமி வரவேற்றாா். முதல்வா் ஜீவா அறிக்கை வாசித்தாா். ஆசிரியை திவ்யா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.