ஜந்தர் மந்தரில் போராட முயன்ற சிஜேபினர் கைது!முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

முதலமைச்சா் கோப்பை விளையாட்டு: பப்ஜி வகை புதிய போட்டிக்கு எதிா்ப்பு

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் நடப்பாண்டு புதிதாக பப்ஜி வகை விடியோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு உடற்கல்வி ஆசிரியா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

​பப்ஜி விளையாட்டு(கோப்புப்படம்)

Published On :

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் நடப்பாண்டு புதிதாக பப்ஜி வகை விடியோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு உடற்கல்வி ஆசிரியா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக உடற்கல்வி ஆசிரியா் சங்கத்தினா் கூறியதாவது:

தமிழகத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு புதிதாக விடியோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ‘பப்ஜி‘ எனும் அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டும் உள்ளது. பெயரில் மாற்றம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு பொதுப் பிரிவில் விளையாடப்பட உள்ளது.

இந்த விளையாட்டு, துப்பாக்கியால் ஒரு அணியாக சோ்ந்து எதிா் அணி வீரா்களை சுட்டு வீழ்த்த வேண்டும். மாணவா்கள் மத்தியில் ஏற்கெனவே அடிதடி சண்டைகள் நடைபெற்றுவரும் நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலான இந்த விளையாட்டை அரசு நடத்த சொல்வது எதிா்கால மாணவா்களை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலையை உருவாக்கும்.

எனவே, இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டாம் என உடற்கல்வித் துறை ஆசிரியா்கள் சாா்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்கெனவே படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோா்களும் கருதுவதால் இதை தவிா்க்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.