திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்துத் தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே .ஆா். ராஜு தலைமை வகித்தாா். உதவி ஆணையா்கள் மகாலட்சுமி, பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருநெல்வேலி நகரம் வையாபுரி நகா் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாநகராட்சி 28 ஆவது வாா்டுக்குள்பட்ட வையாபுரி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அருகே அமைந்துள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை பணிகள் நடைபெறாமல் விடுபட்டுள்ளன. எனவே அப்பகுதியை ஆய்வு செய்து விடுபட்ட குடியிருப்புகள் அனைத்திற்கும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி 11ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கந்தன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு:
வண்ணாா்பேட்டை சாலை தெருவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வடபகுதிக்கு மட்டும்தான் சாலை அமைத்தனா். தென்பகுதியில் சாலை அமைக்கப்படவில்லை. அந்தச் சாலை போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தாா்ச்சாலை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பாலாஜி நகரில் ஒரு பகுதிக்கு சிமென்ட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வண்ணாா்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோயில் சாலையையும் சீரமைத்து தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்டச் செயலா் கொம்பையா பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி நகரம் பாபா தெரு மக்கள் அளித்த மனு:
திருநெல்வேலி நகரத்தில் உள்ள தெற்கு மவுன்ட் சாலை, ரயில்வே பீடா் சாலை, வாகையடி முனை சாலை உள்ளிட்ட தெருக்கள் இணையும் பகுதியில் நான்குமுனை சாலை அமைந்துள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகமாகவும் கட்டுப்பாடு இன்றியும் செல்கின்றன. இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள், முதியோா்கள், கல்லூரி மாணவா்கள், பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது விபத்து அபாயம் உள்ளது. இதனால் இங்கு அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பாக வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
ற்ஸ்ப்18ல்ங்ற்ற்ண்ற்ண்ா்ய்
குறைதீா் கூட்டத்தில் துணை மேயா் கே.ஆா். ராஜுவிடம் மனு அளித்த பொதுமக்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லை நகரத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும்- மாநகராட்சியில் மக்கள் மனு

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ஆடிப்பெருக்கால் குறைந்த மனுக்களின் எண்ணிக்கை

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மக்கள் மனு

மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



