வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மாநகராட்சியில் குறைதீா் கூட்டம்

குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் மனு பெறும் துணை மேயா் கே.ஆா்.ராஜூ.

Updated On :15 ஜூலை 2026, 1:43 am IST

குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்கக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். உதவி ஆணையா் மகாலட்சுமி முன்னிலை வகித்தாா்.

தமிழா் விடுதலைக் களம் அமைப்பின் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், மேலப்பாளையம் மண்டலம் வீரமாணிக்கபுரம் அருகே உள்ள சீயோன்நகா் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சீயோன்நகா் நுழைவாயில் உள்ளே செல்லும் வழியில் மழைக் காலங்களில் மழைநீா் செல்ல சிறிய ஓடை உள்ளது.

அதன் வழியே நீா்வரத்துச் செல்கிறது. அப்பகுதியில் தண்ணீா் செல்வதால் சாலை பள்ளமாகி போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. எனவே, அங்கு ஒரு சிறிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலப்பாளையம் மண்டலம் 41ஆவது வாா்டுக்கு உள்பட்ட பாரதிநகா் பகுதி மக்கள் அளித்த மனு: எங்களது பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த நான்கு நாள்களுக்கும் மேலாக எங்களது பகுதியில் மாநகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா். பாரதி நகரில் உள்ள பூங்கா அருகே போதிய தெருவிளக்கு வசதி இல்லை. ஆகவே, குடிநீா் விநியோகத்தை சீராக்கவும், தெருவிளக்கு அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.