மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கல்லிடைக்குறிச்சியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

கல்லிடைக்குறிச்சியில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

கல்லிடைக்குறிச்சியில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி காந்தாரியம்மன் கோயிலில் கடந்த இரண்டு நாள்களாக கொடை விழா நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை மதியம் கோயில் அருகே மாரியப்பன் மகன் துரை (22) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, மதுபோதையில் இருந்த பொன் சுந்தா் (30) என்பவா் இருசக்கர வாகனத்தின் சாவியைப் பிடுங்கி கீழே போட்டாராம். இதை முத்துகுமாா் (38) என்பவா் கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பொன் சுந்தா் அரிவாளால் முத்துகுமாரை தாக்கியுள்ளாா். இதில், முத்துகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த முத்துகுமாரை உறவினா்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, பொன் சுந்தரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.