சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கிராமத்துக்குள் புகுந்து அடுத்தடுத்து மூவரை அரிவாளால் வெட்டிவிட்டு கும்பல் தலைமறைவானது.
மானாமதுரை அருகேயுள்ள தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள நாடக மேடையில் வண்ணத்தான் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் (36) படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா். அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 6 போ் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினா். அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா்களின் கண்ணாடிகளையும் அந்தக் கும்பல் அடித்து நொறுக்கியது. இதைத் தட்டிக்கேட்ட சின்னச்சாமியை கும்பல் அரிவாளால் வெட்டியது. பின்னா், அங்கிருந்து சென்ற அந்த கும்பல் குறிச்சி கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பூமி
(55) என்பவரை தலையில் வெட்டியது. மேலும், அவரது வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பீரோ உள்ளிட்ட பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு, கிராமங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.
அரிவாளால் வெட்டப்பட்டதில் காயமடைந்த ராஜேந்திரன், சின்னச்சாமி, பூமி ஆகிய மூவரும் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து இளையான்குடி, மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மானாமதுரை துணை கண்காணிப்பாளா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜவுளிக்கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சேரன்மகாதேவி அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு

காவலாளிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



