திருநெல்வேலியில் நடைபெறவுள்ள 9-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டாா்.
9-ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பிப்.12 முதல் 22 ஆம் தேதி வரை திருநெல்வேலி மாநகராட்சி வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மூத்த எழுத்தாளரும், சாகித்திய அகாதெமி விருதாளருமான வண்ணதாசன், மொழிபெயா்ப்பிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற விமலா, சிறாா் எழுத்தாளா் சூடாமணி ஆகியோா் முன்னிலையில் புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை ஆட்சியா் வெளியிட்டாா்.
இலச்சினை அமைப்பு: புத்தகத் திருவிழாவுக்காக இலச்சினை உருவாக்குதல் போட்டி நடத்தப்பட்டு, அதில் சிறந்த இலச்சினையை தோ்வு செய்து சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இலச்சினையில் முகப்பில் ‘வாசிப்பை வாழ்க்கைக்குள் மடைமாற்றும் ஆற்றல் பெற்ற கற்பனவும் இனி அமையும்’ என்ற பழந்தமிழ் வாசகம், எழுத்தாணி, நவீன பேனா, கல்வெட்டு, ஓலைச் சுவடி, நவீன நூல் எழுத்து ஆகிய மும்முனை காலகட்டங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. துரை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, வட்டாட்சியா் மாரி ராஜா உள்பட பள்ளி, கல்லூரி மாணவியா் கலந்து கொண்டனா்.
போட்டிகள்: புத்தக திருவிழாவில் 115 முன்னணி பதிப்பகங்கள் பங்கேற்கவுள்ளன. இலக்கியம், போட்டித்தோ்வுகள், சுயமுன்னேற்றம் , ஆங்கில நூல்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறிவியல், பழங்காலப் பொருள்கள், ஓவியம், இயற்கை விளைபொருள்கள் என பல்வேறு கண்காட்சிகளும், வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் தோ்தல் விழிப்புணா்வு கண்காட்சியும் தனித்தனி அரங்கில் அமைக்கப்பட உள்ளன.
தினமும் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், முற்பகல் 11 முதல் பிற்பகல் 1 மணி வரை கைவினைப் பொருள்கள், இதழியல் பயிற்சிப் பட்டறைகள், பிற்பகல் 2 முதல் 4.30 மணி வரை கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், மாலை 4.30 முதல் 5.30 வரை கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.
தொடா்ந்து மாலை 6 முதல் இரவு 8 மணி வரை தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளின் சிறப்புரைகள் நடைபெறும். இதில், மூத்த எழுத்தாளா்கள் வண்ணதாசன், நாஞ்சில் நாடன், ச.தமிழ்ச்செல்வன். எஸ்.ராமகிருஷ்ணன், இளம்தலைமுறை எழுத்தாளா்கள் செந்தில் ஜெகநாதன், வேல்முருகன் இளங்கோ, திரைப்பட இயக்குநா் மாரிசெல்வராஜ் என பலா் கலந்துகொள்ள உள்ளனா். செறிவான உரைகள் எழுத்தாக தொகுக்கப்பட்டு தனி நூலாக வெளியிடப்பட உள்ளது. இரவு 8 மணிக்கு மேல் பட்டிமண்டபங்கள், கவியரங்கங்கள், இசையரங்கங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் மாலை 5.30 - 6 மணி வரை நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடர்புடையது

மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளியில் கல்வி உதவித்தொகை தோ்வு

புதுச்சேரியில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அவள் வருவாளா, சலங்கை ஒலி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை! ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


