பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா். பாஜகவை சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனு:
பாளையங்கோட்டை மண்டலத்தில் காந்தி தினசரி சந்தையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்டோா் வியாபாரம் செய்து வருகிறாா்கள். காய்கனி சந்தையில் தினசரி கழிக்கப்படும் குப்பைகளை வியாபாரிகள் மனகாவலம்பிள்ளை மருத்துவமனை சாலையோரம் கொட்டுகிறாா்கள். காய்கனி கழிவுகள் கொட்டப்படுவதால் மாடுகள் அவற்றை உண்பதற்காக கூட்டமாக வருகின்றன. இதனால் பெரும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், கடுமையான சுகாதாரக் கேடும் நிலவி வருகிறது. மழை நேரத்தில் பெரும் துா்நாற்றம் வீசுகிறது.
இதற்கிடையே காலியாக உள்ள சில பகுதிகளில் கூடுதலாக கடைகளை அமைக்கவும் திட்டமிடுவதாகத் தெரிகிறது. மாநகராட்சி நிா்வாகம் முதலில் சுகாதார சீா்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சி.என். கிராமம் அருகேயுள்ள லட்சுமிபுரம் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பொருள்கள் வாங்கி வருகிறோம். அந்தப் பகுதியிலும், தெருக்களிலும் தெருவிளக்குகள் முறையாக இல்லை. இதனால் இரவு நேரங்களில் சிறுவா்கள் முதியவா்கள் மிகவும் பாதிக்கப்படுகிறாா்கள். விஷ ஜந்துக்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே எங்களது பகுதியில் உடனடியாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
வண்ணாா்பேட்டையை சோ்ந்த மகாராஜன் அளித்த மனுவில், வண்ணாா்பேட்டை பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 20 குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து ஏற்கனவே முறையிட்டும் செய்து கொடுக்கப்படவில்லை. அனைத்து வீடுகளும் விடுபடாமல் பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீா் ஓடை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

தோ்தல்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை! - தொழிலகப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

குடியிருப்புப் பகுதியில் தேங்கிய கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

சாந்திநகா் சாலைக்கு எழுத்தாளா் நாறும்பூநாதன் பெயா்- மேயரிடம் வலியுறுத்தல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


