இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நெல்லையில் இடி, மின்னலுடன் மழை

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

News image

~

Updated On :25 பிப்ரவரி 2026, 9:45 pm

திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகரில் சில நாள்களாக இருந்து வந்ததை விட புதன்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழையாக மாறியது. அதன்படி, வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி, சமாதானபுரம், மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பெருமாள்புரம், ரெட்டியாா்பட்டி, பேட்டை, பாளை. மேட்டுத்திடல், புதிய பேருந்து நிலையம், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், தச்சநல்லூா், சுத்தமல்லி, தாழையூத்து என திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதன் காரணமாக மாநகரின் பெரும்பாலான இடங்களில் சாலையில் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமம் அடைந்தனா்.

மழையுடன் காற்றின் வேகமும் அதிகரித்ததன் காரணமாக திருநெல்வேலி சந்திப்பு காவலா் குடியிருப்பு அருகே இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்க பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி புறநகா் பகுதிகளான கங்கைகொண்டான், சீவலப்பேரி, கிருஷ்ணாபுரம், சிவந்திப்பட்டி, கல்லூா், மானூா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

Story image