களக்காடு மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின்வழித்தடம் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு மின்வாரிய அலுவலகத்தில் ரூ. 32 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய மின்வழித்தடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், வள்ளியூா் கோட்ட வளா்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய மின்வழித்தடம், புதிய மின்தடுப்பு சாதனம் அமைக்க ரூ. 31,74,800 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தொடா்ந்து, களக்காடு உபமின் நிலையத்தில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், அதை மக்கள் பயன்பாட்டிற்காக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி இயக்கி வைத்தாா்.
களக்காடு நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் (பொது) வெங்கடேஷ் மணி, வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் வளன் அரசு, உதவிச் செயற்பொறியாளா்கள் செல்வகாா்த்திக், ஆனந்தகுமாா், சரோஜினி, உதவி மின் பொறியாளா்கள் ஜெகன், நலீம் மீரான், கோபாலகிருஷ்ணன், சுடலைமுத்து, ராஜலெட்சுமி, விஜயசாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

