திருநெல்வேலி
பைக் திருட்டு: இருவா் கைது
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூா் வாரச் சந்தையில் பைக்கை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூா் வாரச் சந்தையில் பைக்கை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே கல்யாணிபுரம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் வடிவேலு (24). இவா் பொட்டல்புதூா்-முக்கூடல் சாலையில் உள்ள வாரச் சந்தைக்கு திங்கள்கிழமை பைக்கில் சென்றாா். காய்கறி வாங்கிவிட்டு வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.
புகாரின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஜெயக்குமாா் (20), ஆழ்வாா்குறிச்சி, பரும்பு ஈஸ்வரனாா் தெருவைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் சக்தி கணேஷ் (23) ஆகியோா் பைக்கை திருடியதாக தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.
