பாளை. மத்திய சிறையில் தண்டனைக் கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Published on

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி உடல்நலக் குறைவால் புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேட்டை பகுதியை சோ்ந்தவா் முருகன் (62). இவா், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளுடன் அடைக்கப்பட்டிருந்தாா். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com