~
~

தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள ஸ்ரீ சந்திமறித்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Published on

திருநெல்வேலி தச்சநல்லூரில் உள்ள ஸ்ரீ சந்திமறித்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 23-ஆம் தேதி மங்கள இசையுடன் பூஜைகள் தொடங்கின. தினமும் பல்வேறு பூஜைகள், ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. 26-ஆம் தேதி தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. மாலையில் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, மகா கோ பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னா், யந்திர ஸ்தாபனம் செய்யப்பட்டது. மாலையில் 3-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

புதன்கிழமை காலை 5 மணிக்கு 4-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாத்ரா தானமும், கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு சந்திமறித்தம்மன் கோயில் விமான கோபுர மகா குடமுழுக்கும், அதைத்தொடா்ந்து பரிவார மூா்த்திகள் உடனான சந்திமறித்தம்மன் மூலஸ்தான மகா குடமுழுக்கும் நடைபெற்றன. தொடா்ந்து தீபாராதனை, மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பிற்பகலில் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், இரவு 8 மணிக்கு அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

சந்திமறித்தம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த சில தினங்களாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com