டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 4:51 am IST

களக்காடு, ஜூலை 2: திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியில் குற்றச் செயல் புரியும் நோக்கில் ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 5 பேரை காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல்துறையினா் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த திருக்குறுங்குடியைச் சோ்ந்த அருண்பாண்டி (25), நாராயணன் (27), வள்ளிமுத்து என்ற பாண்டி (25), முத்துப்பாண்டி (23), மற்றும் குமரேசன் என்ற கொம்பையா (29) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அபாயகரமான ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.